Monday, May 31, 2010

பிணவறை ஆகும் பிளாச்சிமடா

கடவுளின் பூமி" என்று சொல்லப்படும் கேரளா , எங்கே பார்த்தாலும் பச்சை நிறம். நல்ல பசுமையான மாநிலம், சுத்தமான காற்று ,சுத்தமான தண்ணீர்.கேரளத்தின் நெற்களஞ்சியம் பாலக்காடு. பாலக்காடு மாவட்டத்தில் சித்தூர் தாலுக்காவில் பிளாச்சிமடா என்னும் கிராமம் நெற்களஞ்சியம் மாவட்டத்தின் இதயம் ஒரு காலத்தில். ஒருகாலத்தில் செழிப்பாய் இருந்தது பிளாச்சிமடா என்னும் கிராமம், தண்ணீர் தனியார் மாயம் ஆகும் வரை. ஒரு மாவட்டத்தின் நெற்களஞ்சியம் இரண்டு ஆண்டுகளில் பாலைவனமாய் போகும் என்றால் நம்புவீர்களா ,இதற்க்கு யார் காரணம் என்றால் விஜய் அமிர்க்ஹான் சூர்யா போன்ற நடிகர்கள் விளம்பரத்திற்கு வருவார்களே, நாம் கூட மேட்டுக்குடி என்று நினைத்துக்கொண்டு கோகோ கோலா மற்றும் பெப்சி டின் குடிப்போமே . ஆம் இந்த நிலத்ததடி நீரை சுரண்டியது, மாசு படுத்தியது சுட்ட்ருசுழலை எல்லாமே கோகோ கோலா நிறுவனம் . 2000 ஆம் ஆண்டில் கோகோ கோலா நிறுவனம் ஒரு தொழிற்சாலையை கட்டியது பிளாச்சிமடாவில் .இதன் தண்ணீர் தேவைக்காக பல ஆழ் குழாய் கிணறுகள் போடப்பட்டு தினந்தோறும் 1.5 மிலியன் லிட்டர் தண்ணீர் நிலத்தடி நீரில் இருந்து உறிஞ்சப்பட்டது. பிளாச்சிமடா மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் 400 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்தது. பெருமாட்டி பஞ்சாயத்திற்கு 6,45,000 ரூபாய் வரியாகவும், உரிமத்தொகையாகவும் கிடைத்தது. முதலில் கிராம மக்கள் இதை வரவேற்றனர்.2002 ஆண்டு முதல் குடிநீரின் அளவு குறைய துடங்கியது . தண்ணீர் எல்லாம் கருப்பாக வரதுடங்கியது .தண்ணீரின் சுவையும் மாறத் துடங்கியது.நீர்வளமிக்க பிளாச்சிமடாவில் மக்கள் தண்ணீர் லாரிக்காக காத்திருக்க துடங்கினார். மக்கள் தெருவில் இறங்கி போராட துடங்கினார் , போராட்டத்தின் ஐம்பதாம் நாளில் மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. 7 பெண்கள் காயப்படுத்தப்பட்டனர் . இப்போராட்டம் நாடெங்கும் நடந்தது. "நிலத்தடி நீர் என்பது அப்பகுதி மக்களுக்கு உரிமையானது. மாநில அரசும், அதன் நிர்வாகமும் இந்த அரிய செல்வத்தை பாதுகாப்பதில் பாதுகாவலர்களாக பணியாற்றுகிறது. அந்த நிலத்தடி நீரை, அதன் மீது உரிமையற்றோர், அதிகமாக உறிஞ்சுவதையும், அசுத்தமாக்குவதையும் அனுமதிக்க அரசு இடங்கொடுக்காது. அது மக்கள் நலனைக் காக்கும் ' என்றதொரு வரலாற்று சிறப்புமிக்க நீதிமன்ற உத்தரவை கேரளா உயர்நீதிமன்றம் வழங்கியது. இது இப்போராட்டத்திற்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.2004 ஆம் ஆண்டு பலாக்காடு வறட்சி மாவட்டமாய் அறிவிக்கப்பட்டது . மேலும் கோகோ கோலா நிறுவனம் நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்பதையும் கேரள அரசாங்கம் அறிவித்தது.ஆனாலும் கோகோ கோலா போன்ற பணமுதலை அதை கேட்பதாய் இல்லை . போராட்டம் நடந்து கொண்டே இருந்தது போராட்டத்தின் 1000 நாளில் மேத்தா பட்கர் கலந்து கொண்டார் . ஒரு நாட்டின் அடி நாதம் விவசாயம் அதன் அரசாங்கம் சொன்ன தீர்ப்பாயே மதிக்க வில்லை என்றால் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது . நாட்டை பணமுதலைகளிடம் விற்றுவிட்டதா.ஹிந்து நாளிதழ் சொல்வதை போல் கோகோ கோலா நிறுவனம் ஒரு பத்து விதமான சட்டங்களை மீறி உள்ளது 1. Water (Prevention and Control of Pollution) Act, 19742. The Environment (Protection) Act, 19863. The Factories Act, 19484. Hazardous Waste (Management and Handling) Rules, 19895. The SC-ST (Prevention of Atrocities) Act 19896. Indian Penal Code7. Land Utilization Order, 19678. The Kerala Ground Water (Control & Regulation) Act, 2002 Indian Easement Act, 18829. Indian Easement Act, 1882.தமிழகத்தில் செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் ஊராட்சியில் பாலாற்று தண்ணீரை உறுஞ்சியது பெப்சி. ஒரு காலத்தில் விவசாயம் பார்த்த பூமி இன்று பிளாட் போட்டு விற்கப்பட்டது . அந்த பாலாற்றின் பக்கத்தில் black night பீர் கம்பெனி வேறு . இவர்கள் வெளியிடும் கழிவுகளை பாலற்றிலேயே விடுவது கொடுமை .இதை போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோக் கம்பெனி ஆரணி ஆற்றை உறுஞ்சியது .கோகோ கோலா குடிப்பதை ஒரு மேட்டுக்குடி கலாச்சாரம் என்று நினைத்து குடித்து கொண்டிருக்கிறோம் . நீங்கள் கோகோ கோலா குடிக்கும் நேரத்தில் நம் அன்னை நிலம் கற்பு இழந்து கொண்டிருக்கிறது . இன்னும் நமக்கு தெரியாத எத்தனை பிளாச்சிமாடா என்று தெரியவில்லை ???எத்தனையோ வரட்சிகளை கண்டுள்ளது இந்தியா, நிலத்ததடி நீர் குறைய வெறும் பருவ மழை காரணம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள் . தண்ணீர் தனியார்மயம் ஆகி விட்டது இலவசமாய் தொலைகாட்சி கிடைக்கும் ஆனால் தண்ணீர் கிடைக்காது. நாம் கின்லே இல்லை aqua fina சார்ந்து இருக்கிறோம் . உண்மையிலேயே அது காரணமா , தண்ணீர் பஞ்சம் வரும் பொழுது எப்படி கோகோ கோலா நிறுவனம் தண்ணீர் எடுக்கலாம். மக்கள் உயிரைகுடித்தாவது பாவத்தில் லாபத்தை அடையலாமா??? எப்பொழுதுமே பஞ்சம் இருந்தாலும் உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் தினமும் லட்சக்கணக்கான litre தண்ணீர் எடுக்கிறார்கள் . ஒரு வகையில் அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகள் செய்யும் போர் என்று சொல்லலாம் . நிலங்களின் நீர் ஆதாரத்தை குறைப்பது விவசாயின் பையன் நகரத்திற்கு வருவான் ,இவன் கூலியாய் MNC கம்பனிகளில் வேலை செய்வான் .உணவு சம்பளம் போன்ற எல்லா வற்றிக்கும் அமெரிக்காவை சார்ந்து இருக்கும் பொருளாதார நெருக்கடி உண்டு. இந்த அரசியல் புரியாமல் டுபாகூர் நடிகர்களும் டுபாகூர் கிரிக்கெட் வீரர்களும் விளம்பரத்தில் தோன்றுவார்கள் . அது என்னமோ கோகோ கோலா என்பது இந்த கலாச்சாரத்தின் தூண் போல பிம்பம் வளர்க்கப்படும்.இப்பொழுது கிராமத்து விலை நிலங்கள் ப்ளாட்டுகள் ஆகின . என் ஊர் மதுரையை சேர்ந்த கண்மாய்கள் ப்ளாட்டுகள் ஆகி கொண்டிருக்கின்றன. விவசாயி புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறான் என்பது வருத்தமான விடயம். ஊரிற்கு ஊர் wine shop இருக்கிறது தண்ணி இல்லை என்று நண்பர் வருத்தப்பட்டார் . புத்திகள் மழுங்கடிக்க கலைஞர் தொலைக்காட்சி உள்ளது .முன்பெல்லாம் ஒவொவொரு கடைமுன்பும் தண்ணீர் வைத்திருப்பார்கள் , இப்பொழுது எல்லாம் தண்ணீர் காசு குடுத்து தான் வாங்க வேண்டியுள்ளது. நீங்கள் கோகோ கோலா இல்லை பெப்சி faanta mirinda sprite போன்றவைகளை குடித்தால் நீங்கள் ஏதொ ஒரு வகையில் விவசாயிகளை கொன்று கொண்டிருகிறீர்கள்.

No comments:

Post a Comment